 
			பதிகள் தோறும் இலவச மருத்துவ முகாம்
#அய்யா துணை
அன்பானவர்களே! உலகளந்த ஆண்டவர் வைகுண்டரின் திருவருளால்…திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அணைந்த நாடார்பட்டி ஆனந்த பதி நிழல் தாங்கலில் ஆனி மாதம் 27ம் தேதி (11.07.2025) வெள்ளிக்கிழமை அன்று ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடக்க விழா அன்று தர்மசாலை கட்டிடம், அகிலத்திரட்டு வேதாகம கல்விசாலை, இலவச கணனி கல்வி மையம் திறப்புவிழா மற்றும் IPAC இணைந்து நடத்தும் பதிகள் தோறும் இலவச மருத்துவ முகாம் துவக்க விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது..
“ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்!”
இத்திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உலகைப் படைத்த கடவுள் வைகுண்டரின் திருவருளை பெற்று பலன்பெற அனைத்து பக்த பெருமக்களையும் வருக வருக அன்புடன் அழைக்கிறோம்..!
அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது..
ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்!
#அய்யா உண்டு
 
			